சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “எலைட் மாதிரி பள்ளியில் பழைய முறைப்படி மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும்” என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களில் சிறந்து விளங்கும் மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அவர்கள், உயர் கல்விகளுக்கு செல்ல ஏதுவாக நீட், ஜே.இ.இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளிலும் பங்கேற்க எலைட் மாதிரி பள்ளி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த முறையில் தேர்வு செய்வதால் ஒரு சிலர் மட்டுமே பயன்பெறுவார்கள் என்பதால், அதிக மதிப்பெண் பெற்ற அனைவரும் பயன் பெறும் வகையில், மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியமனு அளிக்கப்பட்டுள்ளது.