நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை கடந்த 18 நாட்களில், 1 ரூபாய் 50 காசுகள் வரை உயர்ந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில், சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இங்கு தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டைக்கான கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவானது தினசரி நிர்ணயம் செய்து வருகிறது.
இந்நிலையில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையானது 5 ரூபாய் 75 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி முட்டை ஒன்று 5 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த 18 நாட்களில், 1 ரூபாய் 50 காசுகள் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் முட்டை சார்ந்த உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது என்பதால், உணவு பிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.