இந்தியா வளர்வதற்கு முக்கியக் காரணம் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக உள்ளதே என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோக்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
துபாயில் மனைவியின் பெயரில் அதிகளவில் சொத்துக்களை வாங்கி குவித்தது குறித்து, மோசின் நக்வியிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு பதிலளித்த அவர், பாகிஸ்தானில் தொழிலதிபர்கள் வளர்ந்தால் திருடர்கள் என முத்திரை குத்தப்படுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.
மேலும், இந்தியாவில் தொழிலதிபர்களுக்கு நல்ல மரியாதை உள்ளதாகவும், பாகிஸ்தானில் தொழிலதிபர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.