விருதுநகரில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
காரியாபட்டி அடுத்த கீழஅழகியநல்லூர் கிராமத்தில் ஆனந்தபிரியா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கனமழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.