வலுவான முதலீடு, தனிநபர் நுகர்வு அதிகரிப்பால் நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி ஆறு புள்ளி இரண்டு சதவீதத்திலிருந்து ஆறு புள்ளி ஒன்பது சதவீதமாக உயரும் என அமெரிக்கா கணித்துள்ளது.
மேலும், சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும் என்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல சர்வதேச நிதியமும், இந்திய பொருளாதாரம் ஆறு புள்ளி எட்டு சதவீதமாக உயரும் என கணித்துள்ளது.