தேனி அருகே மாரடைப்பால் உயிரிழந்த காவல் ஆய்வாளரின் உடல் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சீலையம்பட்டி பகுதியை சேர்ந்த காவல் ஆய்வாளரான நடேசன், விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் மரியாதை செலுத்தினர்.
மேலும் பணிக்காலத்தின்போது நடேசன் உயிரிழந்ததால் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.