இந்திய நிறுவனங்கள் சீனாவின் ஒப்பந்தங்களை தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி மதிப்பிட வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் வணிக உச்சி மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
சீனாவுடன் பணிபுரிபவர்களை அரசாங்கம் தடை செய்யவில்லை எனவும், ஆனால் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதையே விரும்புவதாகவும் தெரிவித்தார்.