இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு கடந்தாண்டு 160 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
பிரிட்டனின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலை சண்டே டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது.
2 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த பட்டியலில் ரிஷி சுனக்கும், அக்ஷதா மூர்த்தியும் இடம் பெற்றனர். கடந்த ஆண்டு அந்தப் பட்டியலில் 275-வது இடத்தில் இருந்த அவர்கள், நடப்பாண்டுக்கான பட்டியலில் 245-வது இடத்துக்கு முன்னேறியுள்ளனர்.
அவர்களது சொத்து மதிப்பு சுமார் 6 ஆயிரத்து 874 கோடியாக அதிகரித்துள்ளது.