ஆந்திர மாநிலம் திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்காக 24 மணி நேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதன் காரணமாக 5 கிலோமீட்டர் நீளத்தில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை தேவஸ்தானம் செய்து கொடுத்து வருகிறது.