கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வயலுரை சேர்ந்த சாந்தி என்பவர், அவரது வீட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவர் வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பான புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.