ஆம்பூரில் அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த நிலையில் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோட்டூரை சேர்ந்த வேண்டாம்மாள் தைராய்டு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் உமர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமணையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவர்களின் தவறான சிகிச்சையில் தான் வேண்டாம்மாள் உயிரிழந்ததாககூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.