ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் பதிவான சிசிடிவி பதிவுகளை போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும் ஆராய்ந்து வருகின்றனர்.
முதல்வரின் உதவியாளரால் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டது டெல்லி அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சிசிடிவி பதிவுகளை போலீஸார் கைப்பற்றி ஆய்வு நடத்துவதன் மூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.