கார் விபத்தில் சக நடிகை மரணம் அடைந்ததால் ஏற்பட்ட வேதனை காரணமாக தெலுங்கு நடிகர் சந்திரகாந்த் தற்கொலை செய்து கொண்டார்.
அண்மையில் ஏற்பட்ட கார் விபத்தில் நடிகை பவித்ரா உயிரிழந்தார். இதனால் வேதனை அடைந்த நடிகர் சந்திரகாந்த், தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம் அல்காபூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நடிகர் சந்திரகாந்தும், பவித்ராவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன்பாக சமூக வலைதளத்தில் சந்திரகாந்த் உருக்கமாக வெளியிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.