மதுரையை அடுத்த பெருமாள்கோவில்பட்டி கரும்பாறை முத்தையா கோவிலில், ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசை உணவு திருவிழா நடைபெற்றது.
இதில், 125 ஆடுகள் வெட்டப்பட்டு கறி விருந்து வைக்கப்பட்டது. 2 ஆயிரத்து 600 கிலோ அரிசி மூலம் உணவு தயார் செய்யப்பட்டு, பரிமாறப்பட்டது. இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.