கோவையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் 84 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் 54 அடியாக இருந்த பில்லூர் அணையின் நீர்மட்டம் 84 அடியை எட்டியுள்ளது.
இதனையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.