உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
திருப்பூர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் மலையடிவாரத்தில் உள்ள பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதனால் அருவியின் கீழ் உள்ள அவனலகேஸ்வரர் கோயிலிலும் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது கோயிலில் இருந்த பக்தர்களை வனத்துறையினர் உடனடியாக வெளியேற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அருவி மற்றும் கோயிலுக்கு செல்ல ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.