தேனி அருகே பேரனை காப்பாற்றும் முயற்சியில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிபட்டி கிராமத்தில் வசித்து வந்த தேவியம்மாள், ரயில் தண்டவாளம் அருகே தனது 4 வயது பேரனுடன் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தார்.
அப்போது ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த பேரனைக் கண்ட மூதாட்டி, அவரை தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டார். இதில் ரயில் மோதி மூதாட்டி தேவியம்மாள் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.