சிவகங்கை சுற்றுவட்டாரத்தில் சுமார் 1 மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்தது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி சிவகங்கை சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.