ராமநாதபுரத்தில் பல மாதங்களாக தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய்த் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகராட்சியில் ரயில்வே பீடர் ரோடு அருகேயுள்ள ஏட்டைய்யா தெருவில், பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது.
இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆகையால், உடனடியாக நகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நிரந்தர தீர்வு காண வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.