கனமழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.