இலங்கை முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் கொத்து கொத்தாக செத்து மடிந்த தமிழீழ மக்களுக்கு ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இலங்கை முள்ளிவாய்க்காலில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் ஈழப்போரில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது.
அப்போது ஈழத்திற்கான உரிமை மீட்பு போரில் இலங்கை ராணுவத்தினரால் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.