நீலகிரி மாவட்டம் உதகை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையால் கடும் குளிர் நிலவி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு அதிகன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சேரிங்கிராஸ், படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.