அரியலூரில் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் ஆய்வு செய்தார்.
அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், வாகனங்களின் பதிவுச் சான்று, முதலுதவிப் பெட்டி, அவசர வழி, தீயணைப்பு கருவி மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 62 பள்ளிகளைச் சேர்ந்த 276- வாகனங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.