மக்களவைத் தேர்தலையொட்டி, டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தங்களது வீட்டிலிருந்தபடி வாக்களித்தனர்.
மக்களவைத் தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டிலிருந்து வாக்களிப்பதற்கான வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.
மே 25-ஆம் தேதி டெல்லியில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களது வீட்டிலிருந்து வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.