காங்கிரஸ் கட்சி பிரிவினை சித்தாந்தத்தைக் கொண்டிருப்பதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் துலேயில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ், பிரிவினை சித்தாந்தத்தைக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கையைப் போல உள்ளதாக தெரிவித்தார். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.