சென்னை பட்டினப்பாக்கத்தில், முன் அறிவிப்பு இன்றி மீன் கடைகளை அகற்றிய பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பட்டினப்பாக்க கடற்கரையை ஒட்டியுள்ள சாலையில் இருபுறமும் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் உதவியுடன் திடீரென வலுக்கட்டாயமாக மீன் கடைகளை அகற்றினர்.
இதனால், மீனவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த மற்ற மீனவர்களும் அங்கே திரண்டு வந்து, அதிகாரிகளை கண்டித்து போராடத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.