மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து ராகுல் காந்தி அவதூறுாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்த வழக்கில் ஏற்கெனவே ராகுல் காந்திக்கு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் அனுப்பியிருந்தது.
இதை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு அவர் பதிலளிக்க வேண்டுமென ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், குறித்த நேரத்தில் அவர் பதிலளிக்க தவறியதால், ராகுல் காந்திக்கு தற்போது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
			















