உணவுப் பொருட்களில் பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உணவுப் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவில் பயன்படுத்துவதால், பொதுமக்கள் இடையே புற்றுநோய் ஏற்படுவதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் அனிதா ஷெனாய் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மத்திய அரசு மற்றும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது.