நாடு முழுவதும் தேர்தல் விதிகளை மீறி எடுத்துச் செல்லப்பட்டதாக இதுவரை 8,889 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு சென்றால், அதற்கான ஆவணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், விதிகளை மீறி எடுத்துச் செல்லப்பட்டதாக 8,889 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 45 சதவீதம் போதைப்பொருட்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.