ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து 927 கனஅடியாக உள்ளது.
தற்போது அணையின் நீர்மட்டம் 44.45 அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.