“ஆதி சங்கரரின் கொள்கை நாட்டை ஒற்றுமைப் பாதையில் அழைத்துச் செல்கிறது” என ஜகத்குரு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேருரையாற்றி, அருளாசி வழங்கினார்.
காஞ்சிபுரத்தில் ஆதி சங்கரரின் 2 ஆயிரத்து 500 -வது சித்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஜகத் குரு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் கலந்து காெண்டனர்.
அப்போது உரையாற்றிய ஜகத் குரு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், “வழிபாட்டு முறைகளின் ஒற்றுமையை உருவாக்கியவர் ஆதி சங்கரர்” என பெருமைபடத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “அனைவரும் சமம் என்பதே ஆதி சங்கரின் கொள்கை” என்றார்.