சிங்கப்பூரில் மே 5 முதல் 11-ஆம் தேதி வரை 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதற்கு முந்தைய வாரம் 13,700 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர்.
அந்நாட்டில் தினமும் சராசரியாக 250 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவதால், பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டுமென சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சர் ஓங் யீ குங் கேட்டுக்கொண்டுள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் தேவைப்பட்டால் கூடுதல் டோஸ் தடுப்பூசி செலுத்தவும் சிங்கப்பூர் சுகாதாரத் துறை பரீசிலித்து வருகிறது.