தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மழைக்காக ஒதுங்கியபோது மின்னல் தாக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆச்சியம்மாள். இவர், மேய்ச்சலுக்காக ஆடுகளை கொண்டு சென்றபோது, கனமழை பெய்தது.
இதையடுத்து, அருகில் இருந்த கட்டிடத்தின் கீழ் மூதாட்டி ஒதுங்கி நின்றார். அப்போது மின்னல் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே மூதாட்டி ஆச்சியம்மாள் உயிரிழந்தார்.