தூத்துக்குடி அருகே காவலர் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரையண்ட் நகரை சேர்ந்த சங்கர் என்பவர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் குடும்பத்தினருடன் ஊருக்கு சென்றிருந்த அவர், திரும்பி வந்து பார்த்து போது கதவுகள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.