நாகை அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகூர்- ஆழியூர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருச்சக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டபோது 7 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மணிமாறன், வளவன்ராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்கள், 8 ஆயிரம் ரூபாய் ரொக்கம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.