ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 50 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டில் கடந்த சில நாட்களாக இடை விடாது மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள் அடித்து செல்லப்பட்டன.
இந்நிலையில் இதுவரை 50 பேர் பலியாகி உள்ளதாகவும், கோர் மாகாணத்தில் வெள்ளம் வருவதைக் கண்டு ஓடிய மக்களை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.