அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் விண்வெளி சுற்றுலா மூலம், ஆந்திராவைச் சேர்ந்த கோபிசந்த் தோட்டகுரா இன்று விண்வெளிக்குச் செல்லவுள்ளார்.
இதன் மூலம் 1984-ம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற ராகேஷ் ஷர்மாவுக்குப் பிறகு, விண்வெளிக்குச் செல்லும் 2-வது இந்தியர் என்ற பெருமையும் கோபிசந்த் தோட்டகுராவுக்குக் கிடைத்துள்ளது.
இவர்களது பயணம், ப்ளூ ஆர்ஜினின் இணையதளத்தில் இன்று இரவு 7 மணி முதல் நேரலை செய்யப்படவுள்ளது.