கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் பிஷ்கெக் பகுதியில் இந்திய மாணவர்கள் தங்கி பயின்று வரும் நிலையில் அந்நாட்டு மாணவர்களுக்கும் இந்திய மாணவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வருகிறது.
இதன் காரணமாக பிஷ்கெக்கில் உள்ள மாணவர்கள் நலனை கண்காணித்து வருவதாகவும், தற்போது நிலைமை சீராக உள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.