முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு செய்தார்.
தமது குடும்பத்தினருடனும், ராஷ்டிரபதி பவனில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து பால ராமரை தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இந்த தரிசனம் மூலம் தங்களது வாழ்வு ஆசிர்வதிக்கப்பட்டதாக மாறியுள்ளதாகவும், நாட்டு மக்கள் அனைவரும் பால ராமரை தரிசனம் செய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.