ஜம்மு-காஷ்மீர், சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜக முன்னாள் தலைவர் சர்பஞ்ச் அய்ஜாஸ் அகமது ஷேக் உயிரிழந்தார்.
ஷோபியானின் ஹீர்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜக முன்னாள் தலைவர் சர்பஞ்ச் அய்ஜாய் மற்றும் தம்பதி படுகாயமடைந்தனர்.
உடனடியாக அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சர்பஞ்ச் அய்ஜாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த தம்பதியினர் தொடர் சிகிச்சையில் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது