கள்ளக்குறிச்சி மாவட்டம், கூகையூர் அருகே செயல்பட்டு வரும் பேக்கரிக் கடையில் வாங்கிய திண்பண்டத்தில் இறந்த நிலையில் பல்லி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூகையூர் பிரிவு சாலை அருகே வாசவி பேக்கரிக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் அவரது குழந்தைகளுக்காக தட்டுவடை திண்பண்டம் வாங்கியுள்ளார்.
அப்போது வீட்டிற்கு சென்று பார்த்த போது இறந்த நிலையில் பல்லி இருந்ததைக் கண்டு தமிழரசன் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.