சிறந்த எம்.பி.க்கான விருது எதிர்காலத்தில் தமக்குக் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்குமென, நடிகையும், மண்டி தொகுதி பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது, பத்மஸ்ரீ விருது என பல விருதுகளைப் பெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு சிறந்த எம்பிக்கான விருது தமக்குக் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் உத்தரவாதங்களை தங்களது கட்சினர் மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், வேறெந்த கட்சியிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை எனவும் கங்கனா ரணாவத் தெரிவித்தார்.