ஈரோடு அருதகே மூதாட்டியை கொலை செய்துவிட்டு 4 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ராதா என்பவர் வீட்டில் தனியாக இருந்துள்ள நிலையில், அவரைக் காண அவருடைய மகள் பழனியம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது தாய் ராதா கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசாருக்கு தகவலளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மூதாட்டியை கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.