கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பாஜக பிரமுகர் வீட்டில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜியகுமார், பா.ஜ.க பிரமுகரான இவர் வெளியில் சென்றிருந்த நிலையில், இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்து 1 கோடியே 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 9 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதையடுத்து விஜியக்குமார் அளித்த புகாரின்பேரில் தனிப்படைகள் அமைத்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.