பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது என புண்ணிய பூமியான பிரயாக்ராஜில் இருந்து ராகுல் காந்திக்கு கூறுவதாக தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறிய அமித் ஷா, அது கண்டிப்பாக மீட்கப்படும் என உறுதியளித்தார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை மேற்கோள்காட்டிய அவர், இதை ரத்து செய்யாமல் காங்கிரஸ் 70 ஆண்டுகாலமாக கட்டிக்காத்தாக குற்றம்சாட்டினார்.