பீகாரில் கங்கையில் படகு கவிழ்ந்து மாயமான இருவரை பேரிடர் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் மானேர் மாவட்டம் மஹாவீர் டோலா பகுதியில் கங்கை நதியில் சிலர் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது இருவர் தவறி ஆற்றில் விழுந்ததாக தெரிகிறது. இதையறிந்த பேரிடர் மீட்பு படையினர் அவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.