நேபாளத்தில் இந்திய மசாலா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மசாலா பொருட்களை வாங்க பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட எத்திலின் ஆக்ஸைடு அளவு அதிகமாக இருந்ததால், இந்திய மசாலாவுக்கு நேபாளம் தடை விதித்தது.
இந்த மசாலா பொருட்களின் மாதிரி ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், ஆய்வு முடிவு வரும்வரை தடை நீடிக்கும் என்றும் நேபாள உணவுத் தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாட்டு துறை செய்தித் தொடர்பாளர் மோகன் கிருஷ்ண மகாராஜன் தெரிவித்துள்ளார்.