ராம பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையேயான தேர்தல் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஆஸம்கரில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களில் வெல்லும் என்று கூறினால், காங்கிரஸும் சமாஜ்வாடி கட்சியும் பதறுவதாக குறிப்பிட்டார்.
மேலும், ராமர் கோயில் கட்டியவர்களுக்குதான் தங்கள் வாக்கு என பொதுமக்கள் முடிவு செய்துவிட்டதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.