நாகை பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும், கடலோரப் பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதனையடுத்து நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது. இதன் காரணமாக சுமார் 27 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 500 பைபர் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.