தமிழகத்தில் ஆளுங்கட்சி, ஆண்ட கட்சி என இரு கட்சிகளும் போதைப்பொருள் நடமாட்டத்தை ஊக்குவிப்பது கடும் கண்டனத்துக்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இளைஞர்களும், கல்லூர் மாணவர்களும் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி வரும் செய்தி வேதனை அளிக்கிறது என கூறியுள்ளார்.
போதைப்பொருட்களின் வணிக மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ள அவர், நாள்தோறும் அரங்கேறும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பரவிவரும் போதைப்பொருள் புழக்கத்தை அடியோடு அழிக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் கடத்தலுக்கு உறு துணையாக செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
















